Thursday, August 27, 2009

அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு
அன்புள்ள அப்பாவுக்கு,
ஆசை மகனின் அன்புக் கடிதம்.

இங்கு குளிரூட்டப்பட்ட அறை
கணிப்பொறி பணி எனினும்
நீ உழுத கரிசல்காட்டின்
மணமின்னும் மறக்கவில்லை.

ஏர்பிடித்துக் காய்த்துப்போன
உன் கரங்கள்
இன்னும் என் கைப்பிடியில்
என்னை வழிநடத்தி..

வெயில் மழையில் நீ நனைந்த காட்சிகள்
இன்னும் பொம்மலாட்டங்களாய்
என் கடைக்கண்ணில்..

நான் ஏற முதுகு தந்தாய்,
வறுமையென்னும் கிணற்றிலிருந்து!
நான் எங்கும் நகர்வதில்லை,
உன் கைபற்றாமல்..

கூலிகளாய் தொடர்ந்துவந்த
தலைமுறைகள்..
மாறியது என்னில்,
மாற்றியவன் நீ.

எனக்குத் தெரியும்!
உன் ஒருவேளை கஞ்சியும்
என் பள்ளி நோட்டுகள்.

விடைகொடு அப்பா,
ஏருக்கும் கலப்பைக்கும்.
புறப்படு, இனி உலகம் சுற்றலாம்.

அறுவடைகள் ஆனந்தம்,
உந்தன் மொழிகளில்
இன்று அறுவடைக்குத் தயாராய்
நீ வளர்த்த பயிர்!

நிரப்பி வை,
மகிழ்ச்சி மட்டும்,
களம் முழுவதும்.

பட்டணத்தின் பகட்டுக்கே
விழிவிரிக்கும் உன்னை,
நான் அழைத்துச் செல்கிறேன்,
உலகின் அதிசயம் காண!

வானில் புள்ளியாய்
நீ கண்ட விமானங்கள்
உனை ஏற்றிப் பறக்கையிலே
நீ மகிழ ரசிக்க வேண்டும்.

கண்காணா தெய்வத்திற்கு
கன்னங்கள் கிழிக்கின்றான்!
கண்முன்னே தெய்வம்,
செருப்பாய் நான் ஆனால் என்ன?

எப்பொழுதும் கேட்டிருப்பேன்,
"காணி நிலம் உழுகாமல்
தின்ன சோறு செரிப்பதில்லை"

இப்பொழுது சொல்கிறேன்,
உனை கூட்டிப் பறக்காமல்
நான் சோறு தின்பதில்லை!

Monday, February 16, 2009

முதியோர் இல்லம்



இது ஒரு
மனித காட்சி சாலை!
இங்கே மிருகங்கள்
வந்து போகின்றன
மனிதர்களை
பார்த்துச் செல்ல!
################
படைப்பு "பழனி"

Saturday, February 14, 2009

அன்புள்ள அம்மா




பத்து மாதம் கருவறையில் சுமந்தாள்
நான் தரையில் கால் பதித்து நடக்கும் வரை
தன் இடையில் சுமந்தாள்
அவளை
என் உயிருள்ளவரை , அவள் இவ்வுலகில் வாழும் வரை
என் இதய அறையில் சுமக்க எண்ணுகிறேன்
என் முதல் குழைந்தையாக வேண்டும் அவள்
கிட்டுமா அந்த வரம் எனக்கு?

Thursday, January 22, 2009

This is call mother love

From tamil kavithai

மனிதா மனிதா

மனிதா மனிதா
எவனோ செதுக்கிய சிலையை வணங்குவதைவிட
உன்னை படைத்தை பெற்றோரை வணங்கு...
உன் வாழ்கையில் எல்லாம் வெற்றியாக அமையும்,
அவர்களைவிட சிறந்த கடவுள் யாரும் இல்லை இவ்வுலகில்...

Thursday, September 11, 2008

அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா
அன்பை பொழியும் அம்மா
அவள் தரும் அன்னத்திலே
ஆயுள் இருக்குமே
கை மணக்கும் கத்திரிக்காய் சாம்பாரிலே
மெய் மணக்கும் நெய் வகை சாப்பிட்டிலே
சத்து தரும் கார வகை பொறியிலே
நமக்கு நன்மை தருமே
மெதுவடை காத்து இருக்கும் கடைசியிலே
காரவடை நிரந்து இருக்கும் இலைதனியிலே
பாயாசம் பதுங்கி இருக்கும் பாத்திரத்திலே
நெய் சாப்பாடு ஒளிந்து இருக்கும் குக்கரிலே
அத்தனையும் கிடைக்கும் சும்மாவே
அதனோடு முத்தமும்
அன்னை தரும் அன்னத்தை
ஒரு முறை ருசித்தால்
ஆயுள் முழுவதும் மணக்கும்
இனிய காலை வணக்கம்

Monday, July 21, 2008

அன்புள்ள அப்பாவுக்கு

*

அன்புள்ள அப்பாவுக்கு,
ஆசை மகனின் அன்புக் கடிதம்.

இங்கு குளிரூட்டப்பட்ட அறை
கணிப்பொறி பணி எனினும்
நீ உழுத கரிசல்காட்டின்
மணமின்னும் மறக்கவில்லை.

ஏர்பிடித்துக் காய்த்துப்போன
உன் கரங்கள்
இன்னும் என் கைப்பிடியில்
என்னை வழிநடத்தி..

வெயில் மழையில் நீ நனைந்த காட்சிகள்
இன்னும் பொம்மலாட்டங்களாய்
என் கடைக்கண்ணில்..

நான் ஏற முதுகு தந்தாய்,
வறுமையென்னும் கிணற்றிலிருந்து!
நான் எங்கும் நகர்வதில்லை,
உன் கைபற்றாமல்..

கூலிகளாய் தொடர்ந்துவந்த
தலைமுறைகள்..
மாறியது என்னில்,
மாற்றியவன் நீ.

எனக்குத் தெரியும்!
உன் ஒருவேளை கஞ்சியும்
என் பள்ளி நோட்டுகள்.

விடைகொடு அப்பா,
ஏருக்கும் கலப்பைக்கும்.
புறப்படு, இனி உலகம் சுற்றலாம்.

அறுவடைகள் ஆனந்தம்,
உந்தன் மொழிகளில்
இன்று அறுவடைக்குத் தயாராய்
நீ வளர்த்த பயிர்!

நிரப்பி வை,
மகிழ்ச்சி மட்டும்,
களம் முழுவதும்.

பட்டணத்தின் பகட்டுக்கே
விழிவிரிக்கும் உன்னை,
நான் அழைத்துச் செல்கிறேன்,
உலகின் அதிசயம் காண!

வானில் புள்ளியாய்
நீ கண்ட விமானங்கள்
உனை ஏற்றிப் பறக்கையிலே
நீ மகிழ ரசிக்க வேண்டும்.

கண்காணா தெய்வத்திற்கு
கன்னங்கள் கிழிக்கின்றான்!
கண்முன்னே தெய்வம்,
செருப்பாய் நான் ஆனால் என்ன?

எப்பொழுதும் கேட்டிருப்பேன்,
"காணி நிலம் உழுகாமல்
தின்ன சோறு செரிப்பதில்லை"

இப்பொழுது சொல்கிறேன்,
உனை கூட்டிப் பறக்காமல்
நான் சோறு தின்பதில்லை!

*

Sunday, June 15, 2008

அம்மா+அப்பா

நண்பர்கள்
nanbargal

கடவுள் தந்த பரிசு....
kadavul thantha paresu ...

அம்மா+அப்பா
ammaa +appa

பரிசா வந்த கடவுள்.........
paresaa vantha kadavul ......

தெலைத்துவிடாதே இந்த இரண்டு பரிசயும்..........
tholaithuvedaathay intha ieraindu paresaiyum .........

Sunday, June 1, 2008

தாயின் அரவணைப்பில்

எல்லா உணர்புகளும் உண்டாக்கும் சொல்,
அம்மா !!!
தாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள்,
அருகில் சில மாதங்களே ஆனா சேய்,
சேய் சிணுங்க தாய் எழுகிறாள்,
ஆராய்ந்து பசி என்று பாலுட்டி உறங்கிபோகிறாள்
திரும்ப சிணுங்கல்,
ஆராய்ந்து இம்முறை எறும்பு கடித்துவிட்டது
தடவிகொடுத்து உறங்கிபோஜிறாள்,
திரும்ப சிணுங்கல்,
அதே ஆராய்ச்சி இம்முறை வயிற்று வலி
மருந்துகொடுத்து உறங்கிபோகிறாள்,
(எந்த பல்கலைகழகத்தில் வாங்கிய பி எச்டி பட்டமோ)
எப்படி சாத்தியம்,
இறைவனின் வரம்,
நேற்று வரை
தாயின் அரவணைப்பில்

தாயில்லாமல் நானில்லை

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தைப் வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்...

தாயில்லாமல் நானில்லை .........

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை ...........

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்......

தாயில்லாமல் நானில்லை .........
அக்ந்தையை அழிப்பாள்
ஆற்றாலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி ......
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

தாயில்லாமல் நானில்லை ...........

Naanga Naanillai

naani amma song in Telugu



--------------------------------------------------------------------------------


Amma Song

Uyirum Neeye

Amma endrazhaikkaatha

Saturday, May 31, 2008

i love you mummy

மகனே மகளே உன்னை சோறூட்டி வளர்த்த
கைகைள் சோர்ந்து போகும்போது - நீ
சோர்வை நீக்கீ சோறூட்டி அவர்கள்
சோர்வை நீக்க மறந்து விடாதே
உனக்கு விதம் விதமாய் உடைகள்
உடுத்தி உபச்சரிய்தவர்கள் உடல்கள்
பலம் இழந்துபோகும்போது - நீ
உடை உடுத்திவிட மறந்து விடாதே
நண்பா தன் பசிமறந்து உன்பசி தீர்த்திட்ட
நெஞ்சங்கள் பசி என்றுஉணரும்
நிலைவராமல் பார்த்துகொழ் இது அத்தனையும்
உன் கடமை அல்ல நீ பட்ட கடன் உன் தாய் தந்தைக்கு

AMMA

AMMA